favicon

Kalai Vizha 2023

Kalai Vizha 2023

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் “

தமிழர் தம் உயிர் நாடியான கலை வடிவங்களை கோர்வையாக்கி அற்புதமான கலைப்படைப்புக்களாக ஒருங்கு சேர்த்து முத்தமிழின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் வருடாந்த கலைவிழா நிகழ்வானது ” 

பாஞ்சசன்யம் ” என்னும் சிறப்பு நாமத்தை தாங்கியதாக எமது கல்லூரி முதல்வரின் தலைமையில் பிரதம அதிதி கல்வி இராஜாங்க அமைச்சர் திரு. அரவிந்தகுமார் அவர்களின் விசேட பங்கேற்புடன் 02.12.2023 அன்று கொ /விவேகானந்தா சபையில் மேள தாளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பான நெறியாழ்கையின் கீழ் பாடசாலை மாணவர்களால் சமர்ப்பணம் செய்யப்பட்ட சகல நிகழ்வுகளும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்கச் செய்து இரசனையூட்டுவனவாக அமைந்தன.

எமது பாடசாலையின் ஏற்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்துதல், ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் எமது தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்குடன் இடம்பெற்றது.

பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. தமிழ் கலாசாரத்தின் அழகை வெளிப்படுத்தும் வகையில் எமது பாடசாலை ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்ட பரதநாட்டிய வரவேற்பு நடனம் மற்றும் பாடல்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் உட்பட கலாச்சார நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை மாணவர்கள் மயக்கினர்.

இந்த நிகழ்வு ஒற்றுமை மற்றும் நமது கலாச்சார வேர்களைப் பாதுகாப்பதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எங்கள் பாடசாலை சமூகத்திற்கு ‘பாஞ்சசன்யம்’ ஒரு சிறப்பான மற்றும் வளமான நாளாக மாற்றியது.

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”

Comments are closed